செய்திகள்

விரைவில் ஆட்சி அமைக்க ஜெயலலிதாவுக்கு கவர்னர் அழைப்பு

தமிழகத்தில் விரைவில் ஆட்சி அமைக்க ஜெயலலிதாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்து உள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக ஜெயலலிதா ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து போயஸ் கார்டன் சென்ற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இந்த தகவலை ஜெயலலிதாவிடம் தெரிவித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதன்பின், கடந்த 7 மாதங்களாக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் காலை 8 மணியளவில் கிண்டி ராஜ் பவனில் கவர்னர் ரோசய்யாவை சந்தித்தார். அப்போது, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கவர்னரிடம் ஓ.பன்னீர் செல்வம் அளித்தார்.

பன்னீர் செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட கவர்னர், தமிழக அமைச்சரவையை விரைவில் அமைக்கும்படி ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், புதிய அமைச்சரவை பட்டியலையும் அளிக்குமாறும் கவர்னர் கேட்டுக்கொண்டு உள்ளார்.