செய்திகள்

விரைவில் எமது ஆட்சி அமையும் : ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சியினால் அரசாங்கத்தை நடத்தி செல்ல முடியாது விரைவில் நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்போம் என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அந்த கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பாவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியினர் இந்த பாராளுமன்றம் காலாவதியாகியது என தெரிவிக்கின்றனர். இது என்ன உணவு பண்டமா காலாவதியாவதற்கு. தற்போதைய பாராளுமன்றத்திற்கான கால எல்லை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரையுள்ளது.
இதன்படி அதற்குள் நாம் ஆட்சிப் பொறுப்பை எம்மிடம் வழங்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம். இந்த அரசாங்கத்தில் வேலை முடியாதவர்களே இருக்கின்றனர். அவர்களுக்க திறமையில்லை திறமையானவர்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர். அவர்களுடன் அரசாங்கத்தை அமைப்போம். என அவர் தெரிவித்துள்ளனர்.