செய்திகள்

விரைவில் திறப்பு விழா காண உள்ள டிக்கோயா வைத்தியசாலை (படங்கள்)

இந்தியா அரசாங்கத்தின் 500 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் இயக்குநா் அனவா் ஹம்தானி அவா்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கோ.சிங்ஹா மற்றும் இலங்கைக்கான இந்திய தூதுவா் ராதா வெங்கட்ராமன் ஆகியோரால் 11.04.2015 அன்று குறித்த வைத்தியசாலையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது இலங்கை இந்தியாவிற்கு இருக்கின்ற உறவு முறைகள் இந்தியா அரசாங்கத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கிளங்கன் வைத்தியசாலை திறப்பு விழா தொடர்பாகவும் கலந்து ஆலோசிக்கப்பட்டதாக வைத்திய இயக்குநா் தெரிவித்தார். அத்தோடு இவ்வைத்தியசாலைக்கு மகாத்மாகாந்தி என பெயா் சூட்டப்படவுள்ளதாக வைத்திய இயக்குநா் மேலும் தெரிவித்தார்.

இந்த புதிதாக நிர்மானிக்கப்பட்ட வைத்தியசாலையில் 6 சத்திர சிகிச்சை பிரிவுகள், 3 அவசர சிகிச்சை பிரிவுகள், 150 கட்டில்கள் மற்றும் பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது பல முக்கியஸ்தா்களும் கலந்து கொண்டனா்.

DSC08154

DSC08165

DSC08168

DSC08208

DSC08222

DSC08225