செய்திகள்

விரைவில் தேர்தலை நடத்த அழுத்தம் கொடுக்கவும் தேர்தல் திருத்தத்தை எதிர்க்கவும மஹிந்த தரப்பு திட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான எம்.பிக்கள் குழு பாராளுமன்றத்தை கலைத்து விரைவில் தேர்தலை நடத்த எதிர்வரும் நாட்களில் அழுத்தங்களை கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது உள்ள தேர்தல் முறைமையிலேயே அடுத்த தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தவும் அவர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய நிலைமையில் உடனடியாக தேர்தலுக்கு செல்ல வேண்டிய தேவையுள்ளதாகவும் இதனால் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் இது தொடர்பாக அழுத்தம் கொடுக்க தீர்மானித்துள்ள அவர்கள் இருக்கும் தேர்தல் முறைமையில் தேர்தலை நடத்தினாலே தங்களுக்கு அதிக ஆசனங்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் இதனால் புதிய தேர்தல் முறையை ஆதரிக்காது பழைய முறைமையிலேயே தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தவும்; தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் நாரஹேன்பிட்;டி அபயாராம விகாரையில் கூடி இந்த குழுவினர் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.