செய்திகள்

விரைவில் நாடு திரும்புவேன்: குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கத் தயார்! பசில் அறிவிப்பு

விசாரணைகளுக்காக இலங்கை கொண்டுவரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, தாம் விரைவில் நாடு திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளார்.

தமக்கு எதிரான விசாரணைகள் குறித்து பதிலளிப்பதற்காக நாடு திரும்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுடன் தொடர்பு கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து பசில் ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாரியளவில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக லஞ்ச ஊழல் தவிர்ப்பு அணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைக்காக பசில் ராஜபக்‌ஷவை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான நீதிமன்ற உத்தரவை பொலிஸார் நேற்று முன்தினம் கோரியிருந்தார்கள். இந்த நிலையிலேயே தான் விரைவில் நாடு திரும்பவுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும்  பசில் ராஜபக்‌ஷ அறிவித்திருக்கின்றார்.