செய்திகள்

வில்பத்து ஆய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது

வில்பத்து சரணாலய பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதியில்  இடம்பெறுவதாக தெரிவிக்கப்படும் மீள் குடியேற்றம் தொடர்பான சுற்றுச் சூழல் அமைப்புகளின் ஆய்வு அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு அந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த விடயம் தொடர்பாக தான் பல்வேறு தரப்பினரிடம் அறிக்கைகளை கோரியுள்ளதாகவும் இதன்படி அந்த அறிக்கைகளை ஆராய்ந்து வில்பத்து தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.