செய்திகள்

வில்பத்து காடழிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி உத்வரவு

வில்பத்து சரணாலயப் பகுதியில் இடம்பெறும் காடழிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

மேலும் குறித்த பகுதியில் சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டு இடங்கள் சுவீகரிக்கப்படுமாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அத்துடன் இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அந்தப் பகுதியிள் தொடர்புடைய அரச அதிகாரிகளுக்கும் இது குறித்து உத்தரவிட்டுள்ளது.