செய்திகள்

வில்லியுடன் ரொமான்ஸ் செய்யும் கவுண்டமணி…

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காமெடியன் கவுண்டமணி. 500 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் கடந்த சிலவருடங்களாக நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

கடந்த வருடம் 49ஓ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் சரியாக போகாத நிலையில் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாதுபடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவர் சினிமா நட்சத்திரங்களுக்கு கேரவன் வாடகைக்கு விடும் தொழிலதிபராம்.

இதில் வில்லி நடிகை சனமுடன் ஜோடி சேர்ந்துள்ளார். திடிரென கோபப்படும் மனைவியை தனது யுக்தியை கையாண்டு சமாளிக்கும் கணவனாக நடித்துள்ளாராம். சுசீந்திரன் உதவி இயக்குனர் பாலமுருகன் இயக்கும் இப்படத்துக்கு கோலிசோடா அருணகிரி இசையமைக்கிறாராம்.

N5