Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆஸி அணியில் பல மாற்றங்கள்

ஆஸி அணியில் பல மாற்றங்கள்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியில் பலமாற்றங்களை  அந்த நாட்டின் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை மேற்கொண்டுள்ளது.தென்னாபிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்டில் விளையாடிய அணியிலிருந்து ஆறுவீரர்கள் மாற்றப்பட்டு மூன்று அறிமுக துடுப்பாட்ட வீரர்கள் உட்பட ஆறு வீரர்கள் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.மட்ரென்சோ,பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப்,நிக்மடிசன் ஆகியோர் புதிய துடுப்பாட்ட வீரர்களாக  இடம்பிடித்துள்ள அதேவேளை சாட்சயர்ஸ், மத்யுவடே,ஜக்சன் பேர்ட், ஆகியோரும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.இதேவேளை கடந்த இரு டெஸ்ட்களிலும் இடம்பெற்றிருந்த ஜோ பேர்ன்ஸ்,அடம்வோகஸ் உட்பட ஆறு வீரர்கள் கழட்டி விடப்பட்டுள்ளனர்.மாற்றங்களை மேற்கொள்வதற்கு எங்களிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவுக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *