Search
Friday 13 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆஸி ஊடகவியலாளரை தாக்கினாரா தென்ஆபிரிக்க அதிகாரி

ஆஸி ஊடகவியலாளரை தாக்கினாரா தென்ஆபிரிக்க அதிகாரி
பந்தின் வடிவத்தை மாற்ற முயன்றார் என்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணித்தலைவர் டுபிளசீயை பேட்டி காண முயன்ற செய்தியாளரை தென்னாபிரிக்க அதிகாரிகள் பிடித்து இழுத்து வெளியேற்றிய சம்பவம் கடும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனல்9இன் செய்தியாளர்  வில்குரொச்சே இவ்வாறு பலவந்தமாக வெளியேற்றியுள்ளார்.
அவர்தென்னாபிரிக்க அணித்தலைவரிடம் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்ப முயன்றதையும், அவ்வேளை தென்னாபிரிக்க அணியின் முகாமையாளர் அவரை விலக்க முயல்வதையும் தொலைக்காட்சிப்படங்கள் காண்பித்துள்ளன, பின்னர் பின்னர் அணி முகாமையாளரும் நிருபரும் மோதிக்கொள்ள முயல்வதையும் அதனை அணியின் பாதுகாப்பிற்கான அதிகாரி தடுக்க முயல்வதையும் தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன.
அதன் பின்னர் குறிப்பிட்ட செய்தியாளரும் தென்னாபிரிக்க அணியின் பாதுகாப்பு அதிகாரியும் மோதிக்கொள்வதையும் பின்னர் குறிப்பிட்ட செய்தியாளரை தென்னாபிரிக்க அதிகாரி இழுத்துவெளியே துரத்துவதையும் காண முடிகின்றது.
இந்த சம்பவத்திற்கு பின்னர் தென்னாபிரிக்க வீரர்கள் தங்கள் சீற்றத்தை வெளியிட்டுள்ளனர். குறிப்பிட்ட செய்தியாளர் டுபிளசியை தொந்தரவு செய்ய முயன்றதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்,
செய்தியாளர் நடந்துகொண்ட விதம் குறித்து ஏமாற்றமடைகின்றேன்,வீரர்களை நிம்மதியாகயிருக்க அனுமதியுங்கள், பொறுமையாக கேள்விகளை கேளுங்கள், என அம்லா தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
எங்கள் சுற்றுப்பயணம் இந்த நிலைக்குள்ளாகியுள்ளது கவலையளிக்கின்றது என டுமினி தெரிவித்துள்ளார்
கடந்தசில நாட்களாக தென்னாபிரிக்க அதிகாரிகள் தங்களை முரட்டுத்தனமாக கையாள்வதாக செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *