Search
Saturday 7 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நாளைய டெஸ்ட் மூலம புதிய சாதனைகள் படைக்க இருக்கும் மெக்கல்லம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நாளைய டெஸ்ட் மூலம புதிய சாதனைகள் படைக்க இருக்கும் மெக்கல்லம்
நியூசிலாந்து அணியின் அதிரடி வீரரரும், கேப்டனாகவும் இருந்து வருபவர் பிராண்டன் மெக்கல்லம். இவர் கடந்த வாரம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் 20-ந்தேதி தொடங்குகிறது. இந்த இரண்டு போட்டிகளுடன் மெக்கல்லத்தின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.
நாளை நடைபெற இருக்கும் டெஸ்டில் மெக்கல்லம் இரண்டு முக்கிய மைல்கல்லை எட்டவுள்ளார். ஒன்று, அவர் தனது 100 வது டெஸ்டில் விளையாடுகிறார். தான் அறிமுகமானதில் இருந்து இதுவரை ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக 100 டெஸ்டில் கலந்து கொள்கிறார்.
மற்றொன்று நியூசிலாந்து அணிக்காக 100-வது டெஸ்டில் விளையாடும் 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி 112 டெஸ்டிலும், முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் 111 டெஸ்டிலும் நியூசிலாந்து அணிக்காக விளையாடியுள்ளனர். தற்போது இந்த இரண்டு டெஸ்ட் மூலம் 101 டெஸ்டில் விளையாடி மெக்கல்லம் 3-வது வீரராக இடம்பெற்றுள்ளார்.
இதற்கு முன் தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டி வி்ல்லியர்ஸ் தொடர்ச்சியாக 98 டெஸ்டில் இடம்பெற்றிருந்தார். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் 153 போட்டிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளார். ஆனால், பார்டர் தான் அறிமுகமான போட்டியில் இருந்து தொடர்ச்சியாக 153 போட்டியில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *