Search
Friday 13 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இங்கிலாந்து அணிக்கு பீட்டர்சன் திரும்புவதற்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டுவிட்டன: மோர்கன்

இங்கிலாந்து அணிக்கு பீட்டர்சன் திரும்புவதற்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டுவிட்டன: மோர்கன்
இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன். இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டபின் அந்த அணிக்காக விளையாட கடும் முயற்சி எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், கெவின் பீட்டர்சனுக்கு வாய்ப்பு வழங்க இயலாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாகக் கூறியது.
இதனால் ஒவ்வொரு நாடுகளும் நடத்தும் டி20 லீக் தொடரில் விளையாடி வருகிறார். தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ராம் ஸ்லாம் லீக் தொடரில் 7 போட்டிகளில் 401 ரன்கள் குவித்து முத்திரை பதித்தார். அதன்பின் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக் பாஷில் விளையாடினார். அப்போது அவர் விளையாடிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
டி20 லீக் தொடரில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் கெவின் பீட்டர்சனை டி20 உலகக்கோப்பை அணியில் சேர்ப்பதற்காக இங்கிலாந்து அணி பரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது.
ஆனால், இங்கிலாந்து அணிக்கு கெவின் பீட்டர்சன் திரும்புவதற்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டுவிட்டதாக இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக இருக்கும் மோர்கன் கூறியுள்ளார். அவர் மீண்டும் அணியில் தேர்வு செய்யப்படமாட்டார் என்பது தன்னுடைய கருத்து என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள பீட்டர்சன் ‘‘என்னைக்குறித்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என்று கூறியிருப்பது சுவாரசியமாக இருக்கிறது. மிகவும் சுவாரசியம்!’’ என்று பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *