Search
Sunday 15 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இங்கிலாந்து 537 ரன்கள் குவிப்பு

இங்கிலாந்து 537 ரன்கள் குவிப்பு

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 537 ரன்கள் குவித்துள்ளது. பதிலுக்கு இந்திய அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது. ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. முதல்நாளான புதன்கிழமை ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 93 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. மொயீன் அலி 99, பென் ஸ்டோக்ஸ் 19 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.2-ம் நாளான இன்றும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார்கள். நேற்று 99 ரன்களுடன் இருந்த மொயீன் அலி, 195 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். 117 ரன்கள் எடுத்தபோது ஷமி பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் இங்கிலாந்தின் ஆதிக்கத்தைத் தொடரச் செய்தார்கள். நேற்று, இந்திய வீரர்கள் இரு கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டனர். இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக் ரன்கள் ஏதும் எடுக்காத நிலையில், முகமது சமியின் பந்துவீச்சில் கொடுத்த கேட்சை ரஹானே தவறவிட்டார். அதேபோல், 10-ஆவது ஓவரில் உமேஷ் யாதவ் வீசிய பந்தில் ஹமீது கொடுத்த கேட்சை முரளி விஜய் தவறவிட்டார். அந்த இருவரும் குறைவான ரன்களில் ஆட்டமிழந்ததால், அந்தத் தவறுகள் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையவில்லை. இன்று, ஸ்டோக்ஸ் 60 மற்றும் 61 ரன்களில் இருந்தபோது எளிதான இரு கேட்ச்சுகளைத் தவறவிட்டார் சாஹா. இருமுறையும் உமேஷ் யாதவால் விக்கெட் எடுக்கமுடியாமல் போனது.

India's captain Virat Kohli makes an unsuccessful attempt to field a ball off the batting of England's Ben Stokes during the second day of the first Test match between India and England at the Saurashtra Cricket Association stadium in Rajkot on November 10, 2016.  / AFP PHOTO / INDRANIL MUKHERJEE / ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT

இங்கிலாந்து அணி வீரர்கள் மிகவும் சுறுசுறுப்பாக ரன்களை எடுத்து இந்திய அணிக்கு மேலும் அழுத்தம் கொடுத்தார்கள். அரை சதத்தை நெருங்கிய வேளையில் ஜானி பேர்ஸ்டோவ் ஷமி பந்துவீச்சில் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தமுறை சரியாக கேட்ச் பிடித்து ஆறுதல் அளித்தார் சாஹா. உணவு இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 450 ரன்கள் எடுத்தது. ஸ்டோக்ஸ் 84, வோக்ஸ் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். உணவு இடைவேளைக்குப் பிறகும் இந்திய அணியின் சோதனை தொடர்ந்தது. ஸ்டோக்ஸ் 173 பந்துகளில் சதம் எடுத்தார். சொந்த மண்ணில் விளையாடும் ஜடேஜா, வோக்ஸ் (4), ரஷித் (5) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். மூன்றாவது வீரராக சதமடித்த ஸ்டோக்ஸ் 128 ரன்களில் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டை (அன்சாரி, 32 ரன்கள்) மிஸ்ரா வீழ்த்தினார். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 159.3 ஓவர்களில் 537 ரன்கள் எடுத்தது. இந்தியத் தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஷமி, யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இங்கிலாந்து அணியின் பெரிய ஸ்கோருக்குப் பதிலடி கொடுக்க களமிறங்கிய தொடக்க வீரர்களான முரளி விஜய்யும் கெளதம் கம்பீரும் மிகுந்த நம்பிக்கையுடன் இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொண்டார்கள். 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *