Search
Saturday 7 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இங்கிலாந்தை நிலைகுலையவைத்த இளம்சுழற்பந்துவீச்சாளர்.

இங்கிலாந்தை நிலைகுலையவைத்த இளம்சுழற்பந்துவீச்சாளர்.
பங்களாதேசின் இளம் அறிமுகசுழற்பந்து வீச்சாளர் மெஹ்டி ஹசன் இங்கிலாந்துடனான இரு டெஸ்ட்கள் கொண்ட தொடரில் 19 விக்கெட்களை வீழ்த்தி அணிக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.
முதல்டெஸ்டில் முதல்நாளன்றே ஆறு விக்கெட்களை வீழ்த்திய அவர் அந்த டெஸ்டில் மேலும் ஆறு விக்கெட்களை வீழ்த்தினார்.இரண்டவாது டெஸ்டிலும் அதேபோன்று மிகச்சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து அணியை நிலைகுலையவைத்த அவர் அணிக்கு முக்கியமான வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
கிரிக்டெ; உலகின் கவனத்தை தன்பக்கம் திருப்பியுள்ள மெஹ்டி தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து குறிப்பிட்டுள்ளதாவது.
நான் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சிறப்பாக விளையாட முயல்வேன்,ஆனால் இந்த தொடர் குறித்து நான் நினைத்துப்பார்க்கவில்லை,அடுத்த இரண்டு வருடங்களில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றே நான்எதிர்பார்த்திருந்தேன்,உறுதியான மனோநிலையுடன் தேசிய அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடவே நான் விரும்பினேன். என அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *