Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இது எனக்கு மிகவும் விசேடமான ஐபிஎல்- இறுதிப்போட்டியில் சதமடித்த வட்சன் கருத்து

இது எனக்கு மிகவும் விசேடமான ஐபிஎல்- இறுதிப்போட்டியில் சதமடித்த வட்சன் கருத்து

2018 ஐபிஎல் எனக்கு மிகவும் விசேடமானது என ஐபிஎல்லின் இறுதிப்போட்டியில் சதம் அடித்து சென்னை அணியின் வெற்றியை இலகுவாக்கிய அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் சேன் வட்சன் தெரிவித்துள்ளார்

இது எனக்கு மிகவும் விசேடமான ஐபிஎல், குறிப்பாக கடந்த வருடம் வேறு அணிக்காக விளையாடிய பின்னர் நான் இம்முறை சென்னை அணிக்காக விளையாடியுள்ளேன் அதன் காரணமாக இது மேலும் விசேடமானதாக அமைகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் பத்து பந்துகளிற்கு பின்னர் நான் ஓவ்வொரு பந்திலும் ஆகக்கூடிய ஓட்டங்களை பெற முயன்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

புவனேஸ்வர் குமார் ஆரம்ப ஓவர்களை மிகச்சிறப்பாக வீசினார் ஆரம்பத்தில் விட்டதை நான் பின்னர் பிடித்துக்கொண்டேன் எனவும் வட்சன் தெரிவித்துள்ளார்
ஸ்டீபன் பிளெமிங்கும் டோனியும் என்னை சிறப்பாக இந்த தொடர் முழுவதும் பார்த்துக்கொண்டனர் என தெரிவித்துள்ள அவர் அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்துள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *