Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை அணியின் ‘‘ஐஸ்மான்’’

இலங்கை அணியின் ‘‘ஐஸ்மான்’’
சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதலாவது இனிங்ஸில் 127 ஓட்டங்களை பெற்ற இளம் வீரர் தனஞ்செயசில்வாவை இலங்கை அணிக்கு கிடைத்துள்ள இன்னொரு சிறந்த வீரர் என வர்ணித்துள்ள அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹாம்போர்ட் தாங்கள் சில்வாவை ஐஸ்மான் என அழைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
முதல் டெஸ்டில் இலங்கை அணி 4 விக்கெட்களை இழந்து 112 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை களத்தில் நுழைந்து அற்புதமான சதத்தை பெற்ற தனஞ்செயசில்வா குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
தனஞ்செய டி சில்வாவை நாங்கள் ஐஸ்மான் என அழைப்போம்,அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவ்வளவு பொறுமை, நிதானம்,பதட்டமின்னை என்பவற்றை வெளிப்படுத்தியுள்ளார், அழுத்தத்தை வெற்றிகரமாக சமாளித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களை கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியை அவர் சிறப்பாக கையாண்டு தான் டெஸ்ட்போட்டிகளிற்கு பொருத்தமானவர் என்பதை நிரூபித்துள்ளார்,
அவர் சோர்ட்பிச் பந்துகளை சிறப்பாக விளையாடுவதை நாங்கள் பார்த்துள்ளோம்,அவரிடம் சிறந்த தொழில்நுட்ப உத்திகள் காணப்படுகின்றன,அவரிடம் பல சாதகமான அம்சங்கள் உள்ளன, இலங்கைக்கு கிடைத்துள்ள சிறந்த வீரர் அவர்
அசேல குணரத்தின விளையாடும் விதமும் சிறப்பானது,இந்த தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் அணியில் இன்னமும் இடம்பெறாத  ஆனால் திறமைவாய்ந்த வீரர்கள் உள்ளது எங்களிற்கு தெரிந்திருந்தது ஆனால் அவர்கள் விளையாடுவதை பார்க்க எங்களிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, தற்போது அவர்கள் தங்களிற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை சிறப்பாக பயன்படுத்தி ஓட்டங்களை பெற்றுள்ளனர், எங்கள் துடுப்பாட்ட வரிசையின் ஆழம் தற்போது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது என போர்ட் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *