Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை அணி அபார வெற்றி

இலங்கை அணி அபார வெற்றி

சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெட்டால் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணி 155 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என பதிலெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக தனஞ்சய டி சில்வா -குஷால் பெரேரா களமிறங்கினர். சிறப்பாக ஆடிய குஷால் பெரேரா 21 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
இருவரும் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 56 ஓட்டங்களை குவித்தனர்.பின்னர் சில்வாவுடன் இணைந்தார் நிரோஷன் டிக்வெல்ல .இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டமாக 84 ஓட்டங்கள் பெற்றனர் . டிக்வெல்ல 41 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தார்.
சில்வாவுடன் பின்னர் இணைந்தார் மென்டிஸ் அவரும் தன் பங்கிற்கு 12 ஓட்டங்களையும் சில்வா 78 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.இலங்கை 24.3 ஓவர்கள் முடிவில் 155 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.153 பந்துகள் மீதமுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிம்பாப்வே ஹராரே மைதானத்தில் இடம்பெறும் முக்கோண கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி நேற்று ஹராரே மைதானத்தில் ஆரம்பமானது.
இப்டபோட்டியில் நாணச்சுழற்யில் வென்ற இலங்கை அணியின் தலைவர் உப்புல் தரங்க தனது அணி களத்தடுப்பில் ஈடுபடும் என்பதற்கு அமைய சிம்பாப்வே அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக ஷாரி மற்றும் சிப்பாஹா ஆகியோர் களமிறங்கினர்.
ஷாரி 7 ஓட்டங்கள் பெற்ற வேளை ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த ஏர்வின்
ஓட்டம் ஏதும் பெறாமல் ஆட்டமிழந்தார்.பின்னர் சிக்கந்தர் ராஷா 1 ஓட்டம் பெற்ற போது ஆட்டமிழந்து செல்ல சிம்பாப்வே அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 14 ஓட்டங்களை பெற்று தடுமாறியது.பின்னர் வில்லியம்ஸ் 9 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழக்க அவ்வணி 4 விக்கெட் இழப்புக்கு 29 பெற்று தடுமாறியது.
அவிவணிக்கு பின்னர் நல்ல தொரு தடுப்பாட்டத்தை வழங்கிய விக்கெட காப்பாளர் பீட்டர் மூர் 47 ஓட்டங்கள் பெற்றதே அதிகூடுதலான ஓட்டமாகும் அணித்தலவைர் கீரிமர் 31 ஓட்டங்களையும் சிப்பாஹா 18 ஓட்டங்களையும் திரிபானே 19 ஓட்டங்களையும் பின்வரிசை வீரர் பன்னியங்கார 12 ஓட்டங்களையும் பெற்றனர்.அவ்வணி 41.3 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டையும் இழந்து 154 ஓட்டங்களை பெற்றது.
பந்து வீச்சில் குணரத்தன 3 விக்கெட்டையும் குலசேகர,லக்மால்,பிரதீப் தலா இரு விக்கெட்டையும் பத்திரண ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.
இதேவேளை இலங்கை -மேற்கிந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஆட்டம் 16ம் திகதி நாளை இதே மைதானத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியில் தனது கன்னி ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய அஷேல குணரத்தன 6.3 ஓவர்கள் பந்து வீச்சி 21 ஓட்டங்களை கொடுத்து ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 3 விக்கெட்டை கைப்பற்றினார்.நீண்ட இடைவேளைக்கு பிறகு அணியில் களமிறங்கிய குலசேகர 2 விக்கெட்டை பதம் பார்த்தார்.ஆட்டநாயகனாக தனஞ்சய டி சில்வா தெரிவானார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *