இந்திய அணியின் இளம்வீரர்களை கொண்ட மத்தியவரிசை குறித்து பொறுமைகாக்குமாறு ஓரு நாள் அணித்தலைவர் டோனி வேண்டுகோள் விடுத்துள்ளார்
நியுசிலாந்திற்கு எதிரான நான்காவது ஓரு நாள்போட்டியில் தோல்வியடைந்த பின்னர் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இந்திய அணி 261 ஓட்டங்களை வெற்றிஇலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடியவேளை மத்திய வரிசையின் இளம்வீரர்கள் மனிஸ்பான்டே மற்றும் ஹார்டிக் பான்ட்யா ஆகியோ விரைவில் ஆட்டமிழந்ததை இந்திய அணியை பாதித்தது,இருவரும் அடித்து ஆட முயன்று ஆட்டமிழந்தனர் .
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டோனி தற்போது புதிதாக ஆடும் வீரர்கள் ஆரம்பத்திலேயே அடித்து ஆட விரும்புகின்றனர்,அவர்களை அப்படி ஆடவேண்டாம் என தெரிவிக்க கூடாது,அவர்கள் 15 20 போட்டிகளில் விளையாடியதும் ஓவ்வொரு சூழ்நிலையிலும் எவ்வாறு விளையாடவேண்டும் என்பதை அறிந்துகொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Previous Postபோதைப் பொருளுடன் இந்திய மீனவர்கள் மூவர் கைது
Next Post40 பேர் இன்று நாடு திரும்புகின்றனர்