Search
Monday 25 September 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

உலககிரிக்கெட் தலைவன் இன்னமும் உயிருடனேயே இருக்கிறான்- தனது சாதனை குறித்து கெய்ல் கருத்து

உலககிரிக்கெட் தலைவன் இன்னமும் உயிருடனேயே இருக்கிறான்- தனது சாதனை  குறித்து கெய்ல் கருத்து

கிரிக்கெட் இரசிகர்களால் விரும்பபடும் ஓரு வீரனான தான் இன்னமும் இருப்பதாக தெரிவித்துள்ள மேற்கிந்திய அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கிறிஸ்கெய்ல் இருபதிற்கு இருபதிற்கு போட்டிகளில் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்
இது குறித்து கெய்ல் மேலும் தெரிவித்துள்ளதாவது
போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் பத்ரி பத்தாயிரம் ஓட்டங்களை பெறுவதற்கு இன்னமும் 3 ஓட்டங்களே அவசியம் என்பதை நினைவுபடுத்தினார். கட்டாயம் அந்த 3 ஓட்டங்களை பெற்றுவிடுங்கள் என்றார்
எனது மனம் முழுவதும் அதுவே காணப்பட்டது.ஆகவே பத்தாயிரம் ஓட்டங்களை பெற்றது குறித்து உண்மையாகவே மகிழ்ச்சியடைகிறேன்.
கிரிக்கெட் இரசிகர்களிற்கு இன்னமும் நான் தேவைப்படுகிறேன், அவர்கள் என்னை இன்னமும் தேடுகின்றனர்.உலகின் தலைவன் இன்னமும் உயிருடன் இருக்கின்றான்.
இருபதிற்கு இருபது போட்டிகளில் பத்தாயிரம் ஒட்டங்களை பெறுவது குறித்து சிறப்பாக உணர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *