Search
Tuesday 15 January 2019
  • :
  • :

என்னுடைய மிகப்பெரிய சாதனை – இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி

என்னுடைய மிகப்பெரிய சாதனை – இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. 71 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணி தொடரை வென்றதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

டெஸ்ட் தொடரை வென்ற பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:- “ கிரிக்கெட்டில் டெஸ்ட் கிரிக்கெட் தான் மதிப்புமிக்க ஒரு ஃபார்மட் என்ற செய்தியை பரப்ப விரும்புகிறோம். டெஸ்ட் கிரிக்கெட் ஒரு நபராக உங்களை மேம்படுத்துகிறது. டெஸ்ட் கிரிக்கெட் நீடிக்கும் வரை, இந்த விளையாட்டும் நீடிக்கும்.

ஆஸ்திரேலிய மண்ணில் 72 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரை வென்றது என்னுடைய மிகப்பெரிய சாதனை. இந்திய அணிக்கு சர்வதேச அளவில் வித்தியாசமான தோற்றத்தை இந்த வெற்றி அளித்திருக்கிறது. எங்களுடைய மாற்றம் இங்கிருந்து தொடங்குகிறது.

நான் கேப்டனாக பொறுப்பேற்றபோது, 4 ஆண்டுகளுக்குப் பின் ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்கிறேன். இந்த அணியை வழிநடத்திச் செல்வதில் நான் பெருமைப்படுகிறேன், எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம், சிறப்புரிமையாக கருதுகிறேன். என்னை மிகச்சிறந்த கேப்டனாக அணி வீரர்கள் மாற்றி இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி எங்களுக்கு வித்தியாசமான அடையாளத்தை அளித்திருக்கிறது. எங்களால் சாதிக்க முடியும் என்பதை வெளிக்காட்டி இருக்கிறது, பெருமைப்பட வைத்துள்ளது.” இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *