Search
Wednesday 22 November 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐபிஎல்லில் விளையாடும் திறன் இலங்கை வீரர்களிற்கு இல்லை- முரளீதரன் அதிர்ச்சி கருத்து.

ஐபிஎல்லில் விளையாடும் திறன் இலங்கை வீரர்களிற்கு இல்லை- முரளீதரன் அதிர்ச்சி கருத்து.

இலங்கையின் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் ஐபி எல் போட்டிகளில் விளையாடும் அளவிற்கு திறமைசாலிகள் இல்லை என இலங்கை அணியின் முன்னாள் சுழபந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் அதிர்ச்சி கருத்தை வெளியிட்டுள்ளார்
இலங்கையில் திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர் ஆனால் அவர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கான திறமையை கொண்டிருக்கவில்லை . ஏனைய நாடுகளில் சிறப்பான வீரர்கள் உள்ளனர்,ஐபிஎல் போட்டிகளில் 32 வெளிநாட்டு வீரர்களையே சேர்த்துக்கொள்ள முடியும் அதனால் இலங்கை வீரர்கள் தெரிவுசெய்யப்படுவதற்கான வாய்ப்பில்லை.
இலங்கை வீரர்கள் சற்று பின்தங்கியுள்ளனர்,முன்னர் மிகச்சிறந்த வீரர்கள் காணப்பட்டனர், அவர்கள் அனைவரும் தற்போது ஓய்வு பெற்றுவிட்டனர், புதிய வீரர்கள் தங்களை நிரூபிக்கும் வரையில் அவர்கள் ஐபிஎல்லிற்கு தெரிவு செய்யப்படமாட்டார்கள் என முரளீதரன் குறிப்பிட்டுள்ளார்.அவர்களை அதனை நோக்கி தயார் படுத்தவேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்ஐபிஎல் தொடரில் பிரகாசித்து வரும் ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் ரசீத் கானை முரளீதரன் பாராட்டியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *