Search
Sunday 15 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐ.பி.எல். அட்டவணை வெளியீடு: தொடக்க ஆட்டத்தில் சென்னை -மும்பை அணிகள் மோதல்

ஐ.பி.எல். அட்டவணை வெளியீடு: தொடக்க ஆட்டத்தில் சென்னை -மும்பை அணிகள் மோதல்

8 அணிகள் பங்கேற்கும் 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஏப்ரல் 7-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். திருவிழா மே 27-ந்தேதி வரை நடக்கிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது.

இந்த சீசனில் நேரம் மாற்றப்பட்டு மாலை 5.30 மணி, இரவு 7 மணிகளில் ஆட்டங்கள் தொடங்கும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. போட்டி நேரத்தை மாற்றுவதற்கு சில அணிகளின் உரிமையாளர்களும், ஒளிபரப்பு நிறுவனத்தாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நேரத்தை மறுபடியும் ஐ.பி.எல். நிர்வாகம் மாற்றியுள்ளது. முந்தைய ஆண்டுகள் போலவே இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கும். ஒரே நாளில் இரண்டு ஆட்டம் இடம்பெறும் போது ஒரு ஆட்டம் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும்.

9 நகரங்களில் மொத்தம் 60 ஆட்டங்கள் நடக்கிறது. இதில் இறுதிப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறுவதும் அடங்கும். அதே சமயம் 2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஐ.பி.எல். போட்டி திரும்புகிறது. சென்னையில் 7 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இங்கு ஏப்ரல் 10-ந்தேதி நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. (15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *