Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கிரஹாம்போர்ட்டே எங்கள் முக்கிய ஆயுதம்- மத்தியுஸ்

கிரஹாம்போர்ட்டே எங்கள் முக்கிய ஆயுதம்- மத்தியுஸ்

தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் முக்கிய ஆயுதமாக அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹாம்போர்ட் விளங்குகின்றார் என அணித்தலைவர் மத்தியுஸ் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.தென்னாபிரிக்கா போன்ற நாடுகளிற்கு விஜயம் மேற்கொள்ளும்  இந்திய துணைக்கண்ட அணிகள் அங்கு  காணப்படும் ஆடுகளங்களிற்கு தங்களை பழக்கப்படுத்திக்கொள்வதில்  கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றன.இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக தென்னாபிரிக்காவின் கிரஹாம்போர்ட் காணப்படுவது  இலங்கை அணிக்கு நன்மையான விடயம், அவரிற்கு தென்னாபிரிக்க ஆடுகளங்கள் குறித்து நன்கு தெரிந்துள்ளது,இந்த விடயத்தில் இலங்கை அணிக்கு உதவுவதில் கிரஹாம் போர்ட்டை விட சிறந்த திறமையானவர் எவரும் இருக்கமுடியாது, இதன்காரணமாக தென்னாபிரிக்க ஆடுகளங்களில் வெற்றிபெறுவதற்காக எவ்வாறு விளையாடவேண்டும் என்பது குறித்து  அவரிற்கு காணப்படும் அறிவை, அனுபவத்தை பயன்படுத்த எண்ணியுள்ளோம்,தற்போதைய தென்னாபிரிக்க அணி அனுபவம் வாய்ந்ததுதிறமையானது இதன் காரணமாக நாங்கள் எல்லா தருணத்திலும் சிறப்பாக விளையாடவேண்டும்என மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *