Search
Wednesday 17 January 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கிரஹாம்போர்ட் நீண்ட நாட்கள் நிலைக்க மாட்டார்- முன்னாள் வீரர் தெரிவிப்பு

கிரஹாம்போர்ட் நீண்ட நாட்கள் நிலைக்க மாட்டார்- முன்னாள்  வீரர் தெரிவிப்பு

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹாம்போர்ட் முக்கியத்துவம் இழந்து வருவது சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் துடுப்பாட்ட வீரர் சிடாத்வெட்டிமுனி கிரஹாம்போர்ட்டின் பதவிக்காலம் விரைவில் முடிவிற்கு வரலாம் என தெரிவித்துள்ளார்
அதற்கான கவலையளிக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன,நான் தற்போது அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ள அசங்க குருசிங்கவை பெரிதும் மதிக்கி;ன்றேன்,ஆனால் தம்புள்ளையில் இடம்பெற்ற போட்டியில் மைதானத்தில் வீரர்கள் மத்தியில் குருசிங்கவையும் சனத்ஜெயசூர்யவையும் மாத்திரம் காணமுடிந்தது அவ்வேளை பயிற்றுவிப்பாளர் எங்கே என்ற கேள்வி என் முன் எழுந்தது இது பிரச்சினையான விடயமாக எனக்கு தோன்றியது என்று அவர் குறி;ப்பிட்டுள்ளார்
இலங்கை அணிக்கு பயிற்றுவிப்பாளரும் முகாமையாளரும் உள்ளனர் இருவரினதும் பணிகள் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளனவா என்பது எனக்கு தெரியாது ஆனால் நடக்கும் விடயங்களை பார்க்கும்போது கிரஹாம்போர்ட் நீண்ட நாட்கள் நிலைக்க மாட்டார் என தோன்றுகின்றது என வெட்டி முனி மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *