Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஜூனியர் உலககோப்பை: இந்தியா 4–வது முறையாக சாம்பியன் பட்டம் பெறுமா?- வெஸ்ட்இண்டீசுடன் நாளை இறுதிப்போட்டி

ஜூனியர் உலககோப்பை: இந்தியா 4–வது முறையாக சாம்பியன் பட்டம் பெறுமா?- வெஸ்ட்இண்டீசுடன் நாளை இறுதிப்போட்டி

19 வயதுக்குட்பட்ட வருக்கான ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா– வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.இந்திய அணி 4–வது முறையாக உலககோப்பை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2000–ம் ஆண்டு இலங்கையில் நடந்த போட்டியில் கயூப் தலைமையிலும், 2008–ல் (மலேசியா) வீராட்கோலி தலைமையிலும், 2012 ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் உம்முகுட் சந்த் தலைமையிலான அணியும் கோப்பையை வென்று இருந்தது.தற்போது இஷான் கிஷன் தலைமையிலான இந்திய அணி 4–வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.இந்திய அணி தோல்வி எதையும் சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளதால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.‘லீக்’ ஆட்டத்தில் அயர்லாந்து (79 ரன்), நியூசிலாந்து (120 ரன்), நேபாளம் (7 விக்கெட்) அணிகளை வென்று இருந்தது. கால்இறுதியில் நமீபியாவை 197 ரன்னிலும், அரை இறுதியில் இலங்கையை 97 ரன்னிலும் வீழ்த்தி இருந்தது.இந்திய அணியில் சர்பிராஸ்கான், அனோமல் பிரீத்சிங் ஆகியோர் பேட்டிங்கிலும், பந்துவீச்சில் அவேஷ் கான், மான்யாக் தாகர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.வெஸ்ட்இண்டீஸ் அணி ‘லீக்’ ஆட்டத்தில் இங்கிலாந்திடம் மட்டும் தோற்றது. கால்இறுதியில் பாகிஸ்தானையும், அரை இறுதியில் வங்காள தேசத்தையும் வீழ்த்தி இருந்தது.முன்னதாக இன்று நடைபெறும் 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் இலங்கை– வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *