Search
Sunday 12 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

டெல்லி மைதான சிக்கல் தீர்ந்தது

டெல்லி மைதான சிக்கல் தீர்ந்தது

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் 20 ஓவர் உலக கோப்பை ஆட்டங்களை நடத்துவதற்கு தேவையான அனுமதி சான்றிதழை அளிக்க டெல்லி மாநகராட்சிக்கு உத்தரவிடக்கோரி டெல்லி கிரிக்கெட் சங்கம் சார்பில் அங்குள்ள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
பாதுகாப்புக்கு முன்பணமாக ரூ.50 லட்சமும், மற்ற நடைமுறைகளை 20 நாட்களுக்குள் முடித்து கொடுத்தால் போட்டியை நடத்த அனுமதி அளிக்க தயார் என்று டெல்லி மாநகராட்சி கோர்ட்டில் நேற்று முன்தினம் தெரிவித்தது.
இதனால் நிம்மதியடைந்துள்ள டெல்லி கிரிக்கெட் சங்கம் தனது மனுவை நேற்று வாபஸ் பெற்றுக் கொண்டது. இதன் மூலம் 20 ஓவர் உலக கோப்பை மற்றும் ஐ.பி.எல். ஆட்டங்கள் டெல்லியில் நடப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *