Search
Sunday 12 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தென்னாபிரிக்காவில் கடும் சவாலை எதிர்கொள்வோம்- போர்ட்

தென்னாபிரிக்காவில் கடும் சவாலை எதிர்கொள்வோம்- போர்ட்

தென்னாபிரிக்காவிற்கான சுற்றுப்பயணத்தின்போது இலங்கை அணி கடும்சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என அணியின் பயிற்றுவிப்பாளர் கிரகாம்போர்ட் எச்சரித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ளும் போது இலங்கை அணி துடுப்பாட்டம், பந்துவீச்சு களத்தடுப்பு ஆகிய மூன்று விடயங்களிலும் முன்னேற்றத்தை காண்பிக்கவேண்டும்.
நாங்கள் கடும் சவாலை சந்திக்கவுள்ளோம்,தற்போது தென்னாபிரிக்கா எவ்வளவு சிறப்பாக விளையாடி வருகின்றது என்பது அனைவருக்கும் தெரியும்,குறிப்பாக நாங்கள் களத்தடுப்பில் முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டும் சிம்பாப்வேயில் காணப்பட்ட ஆடுகளங்களில் இருந்து முற்றிலும் வேறுவிதமான ஆடுகளங்களையே நாங்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *