Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தென்னாபிரிக்க தொடர் கடினமானதாக காணப்படும்- தரங்க

தென்னாபிரிக்க தொடர் கடினமானதாக காணப்படும்- தரங்க
தென்னாபிரிக்க தொடர் மிகவும் கடினமாகயிருக்கும்  கடினமாக பாடுபடவேண்டியிருக்கும் என  இலங்கை அணியின் தலைவர் உபுல்தரங்க தெரிவித்துள்ளார்
சிம்பாப்வேயில் இடம்பெற்ற முத்தரப்பு தொடரை வென்ற பின்னர் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை அணி அடுத்து தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை புதிய இளம் திறமையான வீரர்களை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
இது மிகவும் சிறப்பான தருணம் என கருதுகின்றேன்,இலங்கை அணியின் வீரர்களிற்கே  முழு பாராட்டுகளும் செல்லவேண்டும்,கடந்த இரண்டு வாரங்களாக அவர்கள் அற்புதமாக விளையாடியுள்ளனர்,மென்டிஸ் சிறப்பாக விளையாடினார், அதன் பின்னர் இலக்கை நோக்கி நகர்வது இலகுவாகிவிட்டது,அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள், நாங்கள் புதிய திறமையான வீரர்களை இனம்கண்டுள்ளோம், எனினும் தென்னாபிரிக்க தொடர் கடினமானதாக அமையப்போகின்றது,நாங்கள் கடினமாக பாடுபடவேண்டியிருக்கும

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *