Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: முதல் நாளில் ஆஸி. அசத்தல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: முதல் நாளில் ஆஸி. அசத்தல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி, முதல்நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 105 ரன்கள் எடுத்து வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.இந்த இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி, பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆனால், ஆரம்பமே அந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தார்கள் ஆஸி. பந்துவீச்சாளர்கள். முதல் நான்கு விக்கெட்டுகளை 32 ரன்களுக்கு இழந்தது தென் ஆப்பிரிக்கா. பின்கள வீரர்களான பவுமா 51, டி காக் 84 ரன்கள் எடுத்து அணியின் சரிவைத் தடுத்து நிறுத்தினார்கள். தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸி. தரப்பில் ஸ்டார்க் 4, ஹேஸில்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.   பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி, முதல்நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 105 ரன்கள் எடுத்து வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. வார்னர் 73, மார்ஷ் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்கள். சமீபத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா. எனவே இந்த டெஸ்ட் தொடர் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *