தலைப்பு செய்திகள்

தோனி இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆட வேண்டும் என்று பிரட் லீ ஆலோசனை

தோனி இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆட வேண்டும் என்று  பிரட் லீ ஆலோசனை

தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக சோபிக்கவில்லை என்பதால் அவர் தனது பழைய பாணி இயல்பான அதிரடி ஆட்டத்துக்குத் திரும்ப வேண்டுமென்று ஆஸி.முன்னாள் வீரரும், நடப்பு வர்ணனையாளருமான பிரெட் லீ ஆலோசனை வழங்குகிறார்.

இந்தியா டுடேவுக்கு பிரெட் லீ அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தோனி எவ்வளவு சிறந்த வீரர் என்பதை நாம் அறிவோம். அவர் நன்றாக ஆடவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் அருமையான குணம் படைத்தவர், கிரிக்கெட் ஆட்டத்திற்கு அவர் எவ்வளவு விரும்பத் தகுந்தவர் என்பதையும் நாம் அறிவோம். அடுத்த போட்டியில் மிகப்பெரிய ஸ்கொர் எடுப்பார் என்று நம்புகிறேன்.

இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென்கள் மூலம் போட்டி இருப்பது நல்லதுதான். நான் ஆஸ்திரேலியாவுக்கு ஆடியபோதும் அப்படித்தான் எப்போதும் இரு வீச்சாளர்கள் மணிக்கு 140கிமீ வேகத்தில் வீசக்கூடியவர்கள் இருப்பார்கள். நம் இடம் உத்தரவாதமில்லை என்பது நமக்கு தெரியும் அதனால்தான் மேலும் கடினமாக ஆட வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது.

தோனியைப் பொறுத்தவரையில் அவர் அடித்து ஆட வேண்டியதுதான். நான் இங்கு உட்கார்ந்து கொண்டு அவர் எப்படி ஆடவேண்டும் என்று கூறுவதற்கில்லை. ஏனெனில் அவர் தன்னளவில் ஒரு ஆச்சரியகரமான வீரர், கேப்டன். அவர் தனது இயல்பான அதிரடி ஆட்டத்திற்கு விரைவில் திரும்புவார் என்று எதிர்பார்க்கிறேன்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *