Search
Thursday 5 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாக்கிஸ்தானை சிதறடித்த அறிமுகப்பந்துவீச்சாளர்

பாக்கிஸ்தானை சிதறடித்த அறிமுகப்பந்துவீச்சாளர்
30 வயது அறிமுகவேகப்பந்து வீச்சாளர் கொலின் டி கிரான்ஹோமின் அற்புதமான வேகப்பந்து வீச்சு காரணமாக நியுசிலாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்டில் பாக்கிஸ்தான் அணி  தனது முதலாவது இனிங்சில் 133 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்துள்ளது.
ஹராரேயில் பிறந்த நியுசிலாந்து வீரரான ஹோம் 41 ஓட்டங்களை கொடுத்து ஆறு விக்கெட்களை வீழ்த்தினார்,பின்னர் கருத்து தெரிவித்த அவர் இன்றைய நாள் டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகவும் இலகுவான நாளாக காணப்பட்டது,நான் சரியான இடத்தில் பந்து வீசினேன் என குறிப்பிட்டார்.
தனது 50 வது டெஸ்டில் விளையாடிய பாக்கிஸ்தான்  அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் 31 ஓட்டங்களை பெற்றார்,ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களிற்கு அச்சுறுத்தும் விதத்தில் காணப்படாத போதிலும் பாக்கிஸ்தான் வீரர்களின் பொறுமையின்மை காரணமாக அவர்கள் சிறிய ஓட்ட எண்ணிக்கைக்கு ஆட்டமிழந்தனர்.
பின்னர் தனது முதலாவது இனிங்ஸை ஆடிய நியுசிலாந்து 104 ஓட்டங்களிற்கு மூன்று விக்கெட்களை இழந்துள்ளது.முதல்நாள் ஆட்டம் மழைகாரணமாக முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளே போட்டி ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *