செய்திகள்

பாடங்களை கற்றுக்கொள்வதற்கான அனுபவம்-பங்களதேஸ்

இங்கிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட்போட்டியை 22 ஓட்டங்களால் தோற்றதை பாடம் கற்றுக்கொள்வதற்கான அனுபவம் என பங்களாதேஸ் அணித்தலைவர் முஸ்தபிகுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாங்கள் எங்களால் முடிந்தளவிற்கு போரடினோம்,15 மாதங்களிற்கு பின்னர் பங்களாதேஸ் இவ்வாறு போராடும் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள், நாங்கள் எங்களால் சிலவிடயங்கள் முடியும் என நிருபிக்கவேண்டிய நிலையில் இருந்தோம்,
நான் இந்த தோல்வியை ஏமாற்றம் என தெரிவிக்க மாட்டேன், பாடங்களை கற்றுக்கொள்வதற்கான அனுபவம் என குறிப்பிடுவேன் என தெரிவித்துள்ளார்.