Search
Thursday 12 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மும்பை டெஸ்ட்: இங்கிலாந்து நல்ல தொடக்கம்! அறிமுக வீரர் ஜென்னிங்ஸ் அரை சதம்!

மும்பை டெஸ்ட்: இங்கிலாந்து நல்ல தொடக்கம்! அறிமுக வீரர் ஜென்னிங்ஸ் அரை சதம்!

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியதுமொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஒரு ஆட்டம் சமனில் முடிந்துள்ளது. எனவே, தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் வான்கடே டெஸ்டில் இந்தியா களமிறங்கியுள்ளது. மறுமுனையில், தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. இதற்கு முன்பாக கடந்த 1985-1987 காலகட்டத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து 17 போட்டிகளில் தோல்வியைத் தழுவாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது 16 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி காணாமல் தொடர்ந்து வரும் இந்திய அணி, வான்கடே டெஸ்டிலும் தோல்வியை தவிர்கும் பட்சத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை பெறும்.டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் ரஹானே, சமிக்குப் பதிலாக ராகுல், புவனேஸ்வர் குமார் இடம்பெற்றுள்ளார்கள். இங்கிலாந்து அணியில் கீட்டன் ஜென்னிங்ஸ், ஜேக் பால் புதிதாக இடம்பெற்றுள்ளார்கள். முதல்நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி, 31 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்துள்ளது. குக் 46 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் வீழ்ந்தார். அறிமுக வீரர் ஜென்னிங்ஸ் 89 பந்துகளில் அரை சதம் எடுத்தார். உணவு இடைவேளையின்போது ஜென்னிங்ஸ் 65, ரூட் 5 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *