Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முற்றிலும் வித்தியாசமான ஆடுகளமாக இருந்தது: தோல்வி குறித்து டோனி கூறியது

முற்றிலும் வித்தியாசமான ஆடுகளமாக இருந்தது: தோல்வி குறித்து டோனி கூறியது

புனேயில் நடந்த முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இந்தியாவை சுருட்டியது. அனுபவம் இல்லாத இலங்கை அணியிடம் வீழ்ந்தது குறித்து இந்திய கேப்டன் டோனி கூறுகையில், ‘சமீபத்தில் நாங்கள் விளையாடிய ஆடுகளங்கள் போன்று இல்லாமல் இது முற்றிலும் வித்தியாசமான ஆடுகளமாக இருந்தது.
சொல்லப்போனால் இங்கிலாந்து ஆடுகளங்கள் போன்று காணப்பட்டது. நிறைய புற்கள் இருந்தன. விதவிதமாக பவுன்ஸ் ஆனது. இது போன்ற ஆடுகளத்தில் நாங்கள் இதைவிட சிறப்பான ஷாட்டுகளை அடித்திருக்க வேண்டும். 130 முதல் 135 ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம்’ என்றார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *