Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரொஸ் டெயிலரின் தலைமைத்துவத்தால் அணிக்குள் நெருக்கடி ஏற்பட்டது- சுயசரிதையில் மக்கலம்

ரொஸ் டெயிலரின் தலைமைத்துவத்தால் அணிக்குள் நெருக்கடி ஏற்பட்டது- சுயசரிதையில் மக்கலம்

நியுசிலாந்து அணிக்கு துடுப்பாட்வீரர் ரொஸ்டெயிலர் தலைமை தாங்கியவேளை அணிக்குள் பாரிய முறுகல்நிலை ஏற்பட்டது என தெரிவித்துள்ள முன்னாள் அணித்தலைவர் பிரன்டன் மக்கலம் டெய்லரின் தலைமைத்துவம் அணிக்கு உற்சாகத்தை அணிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரன்டன் மக்கலம் தனது டிக்ளயர் என்ற சுயசரிதையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.தனது சுயசரிதையில் அவர் டெய்லரின் தலைமைக்காலத்தில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நியுசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தவேளை டெய்லரின் தலைமைத்துவம் குறித்து அணியினர் மத்தியில் கடும் அதிருப்தி காணப்பட்டது,பல வீரர்கள் தங்களால் அணித்தலைவருடன் நேரடியாக பேசமுடியாது என்பதால் என்னை பேசுமாறு கேட்டனர்.எனினும் டெய்லர் தவறாக புரிந்துகொள்வார் என அஞ்சி நான் அதனை தவிர்த்துக்கொண்டேன்.நான் அணியினருடனோ அல்லது பயிற்றுவிப்பாளருடனோ பேச மறுக்கும் அணித்தலைவர் மத்தியில் மாட்டிக்கொண்டேன், நான் சிறந்த உபதலைவராக செயற்பட முனைந்தேன் ஆனால் அணிக்கும் அமைதியின்மை தீவிரமடைந்தது என மக்கலம் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *