செய்திகள்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டி: தென் ஆப்பிரிக்கா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

வங்கதேசம்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஓவர் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் டு பிளிசிஸ் 79 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார.

149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களான தமீம் இக்பால் (5), சவுமியாக சர்கார் (7) சொற்ப ரன்களில் ஆட்டம் இருந்தனர். இதனால் வங்காள தேசத்தை வழிநடத்திச் செல்லும் பொறுப்பு சாஹிப் அல் ஹசன், மிஷிபிகுர் ரஹிம் ஆகியோரிடம் வந்து சேர்ந்தது.

சிறப்பாக விளையாடிய சாஹில் அல் ஹசன் (26), சவுமியா சர்கார் (17) ரன்களில் அவுட் ஆனார்கள். அதன்பின் வங்காள தேச வீரர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இதனால் அந்த அணி 18.5 ஓவரில் 96 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஆகவே, தென்ஆப்பிரிக்கா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் அபோட் (1), ரபாடா (2), பர்னெல் (1), வீஸ் (2), பாங்கிசோ (1), டுமினி (2) விக்கெட்டுகள் எடுத்தனர்.