Search
Thursday 12 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விம்பிள்டன் அரையிறுதியில் ரோஜர் பெடரருடன் ஆண்டி முர்ரே மோதல்

விம்பிள்டன் அரையிறுதியில் ரோஜர் பெடரருடன் ஆண்டி முர்ரே மோதல்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் ரோஜர் பெடரருடன் பிரிட்டனின் ஆண்டி முர்ரே பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் காலிறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரான்சின் கில்லஸ் சைமனை வென்றார்.
அதன்பின்னர் நடந்த 2வது காலிறுதி ஆட்டத்தில் பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரே, கனடாவின் வாசக் போஸ்பிசிலை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 6-4, 7-5, 6-4 என்ற செட்கணக்கில் முர்ரே வெற்றி பெற்றார். இதனால், நாளை மறுதினம் நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் பெடரர்-முர்ரே பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *