Search
Thursday 12 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸ்: மூத்த சகோதரி வீனசை வென்று காலிறுதிக்கு முன்னேறினார் செரீனா

விம்பிள்டன் டென்னிஸ்: மூத்த சகோதரி வீனசை வென்று காலிறுதிக்கு முன்னேறினார் செரீனா

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், தனது சகோதரி வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் அமெரிக்காவின் வில்லியம்ஸ் சகோதரிகளான செரீனா–வீனஸ் மோதினர். சென்டர் கோர்ட் ஆடுகளத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய செரீனா வில்லியம்ஸ், தனது மூத்த சகோதரியை 6-4, 6-3 என்ற நேர்செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

33 வயதான செரீனா 20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ளார். விம்பிள்டன் பட்டத்தை 5 முறை கைப்பற்றி இருக்கிறார். 35 வயதான வீனஸ் வில்லியம்ஸ் 7 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றுள்ளார். விம்பிள்டன் பட்டத்தை மட்டும் 5 முறை கைப்பற்றி உள்ளார்.
இருவரும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் நம்பர் ஓன் வீராங்கனையான செரீனா 15 போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். 16–வது வரிசையில் இருக்கும் வீனஸ் 11 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *