Search
Saturday 7 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வீராட் கோலி செயல்பாட்டில் தவறு எதுவும் இல்லை: விவியன் ரிச்சர்ட்ஸ் சொல்கிறார்

வீராட் கோலி செயல்பாட்டில் தவறு எதுவும் இல்லை: விவியன் ரிச்சர்ட்ஸ் சொல்கிறார்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் விவியன் ரிச்சர்ட்ஸ்.

கிரிக்கெட் சகாப்தங்களில் ஒருவரான அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:–இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான வீராட் கோலி ஆடுகளத்தில் ஆக்ரோஷத்துடன் செயல்படுகிறார். இது தரமானது. அவரது இந்த அணுகுமுறை மற்றும் செயல்பாட்டில் தவறு எதுவுமில்லை.

டோனியிடம் இருந்து அவர் முற்றிலும் மாறுபட்டவர். கோலியின் ஆர்வமும், ஆக்ரோஷமும் ஆட்டத்துக்கு தேவையானது. அவரிடம் துடிப்பும், வேகமும் அதிகமாக காணப்படுகிறது. எதிர்கால இந்திய அணியின் பிரகாசம் அவரது கையில் இருக்கிறது.வீராட்கோலி இன்னும் இளம் வீரரான அவருக்கு 26 வயது தான் ஆகிறது. அவரது பேட்டிங் நுணுக்கம் சிறப்பாக இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் வாரியம் என்னை அணுகினால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மகிழ்ச்சியுடன் உதவ தயார். திறமையான வீரர்களுக்கு எனது உதவியை அளிக்க தயாராக இருக்கிறேன்.இவ்வாறு ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *