Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வெலிங்டன் டெஸ்ட் – இந்திய அணி 165 ‘ஆல் ஆவுட்’

வெலிங்டன் டெஸ்ட் – இந்திய அணி 165 ‘ஆல் ஆவுட்’

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நேற்று, முதல் டெஸ்ட் வெலிங்டனில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.இந்திய அணிக்கு பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஜோடி துவக்கம் தந்தது. டிம் சவுத்தீ ‘வேகத்தில்’ பிரித்வி ஷா (16) போல்டானார். பின், அறிமுக வேகப்பந்துவீச்சாளர் ஜேமிசன் தொல்லை தந்தார். புஜாராவை (11) அவுட்டாக்கிய இவர், 18வது ஓவரில் கேப்டன் விராத் கோஹ்லியை (2) ‘பெவிலியனுக்கு’ அனுப்பினார்.

மறுமுனையில் நிதானமாக ஆடிய துவக்க வீரர் மயங்க் அகர்வால், அவ்வப்போது பவுண்டரி அடித்து ஆறுதல் தந்தார். மொத்தம் 84 பந்தில் 34 ரன் (5 பவுண்டரி) எடுத்த இவர், டிரண்ட் பவுல்ட் ‘வேகத்தில்’ ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹனுமா விஹாரி (7), ஜேமிசன் பந்தில் அவுட்டானார். பின் இணைந்த ரகானே, ரிஷாப் பன்ட் ஜோடி நிதானமாக விளையாடியது. தேநீர் இடைவேளையின் போது மழை குறுக்கிட, முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்திருந்தது.Tamil_News_large_2486390

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று(பிப்.,22) துவங்கியது. அஜஸ் படேல் பந்தில் சிக்சர் விளாசிய பன்ட், 19 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த பந்திலேயே சவுத்தீயின் வேகத்தில் அஷ்வின் போல்டானார். தொடர்ந்து ரஹானேவையும்(46) சவுத்தீ வெளியேற்றினார். இஷாந்த்(5) ஜேமிசன் பந்தில் அவுட் ஆனார். சவுத்தீயின் பந்தில் 3 பவுண்டரிகள் விளாசிய ஷமி(21), அவரிடமே தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து சார்பில் ஜேமிசன், சவுத்தீ தலா 4 விக்கெட் கைப்பற்றினர். தொடர்ந்து நியூசி அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *