Search
Thursday 13 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வேகப்பந்து வீச்சாளர்களே வெற்றிக்கு காரணம்- டிக்வெல

வேகப்பந்து வீச்சாளர்களே வெற்றிக்கு காரணம்- டிக்வெல
இறுதி ஓவர்களை சிறப்பாக வீசி மேற்கிந்திய அணியிடமிருந்து வெற்றியை இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் பறித்துள்ளதாக துடுப்பாட்ட வீரர் நிரோசன் டிக்வெல தெரிவித்துள்ளார். சிம்பாப்வேயில் இடம்பெற்று வரும் முத்தரப்பு தொடரில் இலங்கையுடனான முக்கிய போட்டியில் மேற்கிந்திய அணியை இலங்கை தோற்கடித்தமை குறித்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
 அவர் மேலும் குறிப்பிட்டதாவது- இறுதிநேரத்தில் கடும் பதட்ட நிலை காணப்பட்ட போதிலும் எங்கள் வேகப்பந்துவீச்சாளர்கள்  பதட்டமின்;றி சிறப்பாக பந்துவீசினர்,தோல்வியை நாங்கள் தவிர்த்துக்கொண்டதிற்கு வேகப்பந்துவீச்சாளர்களே முக்கிய காரணம்,331 ஓட்டங்களை மேற்கிந்திய அணி பெறுவதை தடுக்க முடியும் என நாங்கள் நம்பிக்கை கொண்டிருந்தோம்,நாங்கள் சில கட்ச்களை தவறவிட்டோம்,ஆனால் அதிஸ்டவசமாக நாங்கள் வெற்றிபெற்றோம்,
மூன்றாவது வீரராக களமிறங்குவதும், விக்கெட் காப்பாளராக பணியாற்றுவதும் மிகவும் கடினம்,நீங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடவேண்டும்,ஆனால் அணிக்காக அதனை செய்தேயாகவேண்டும், எனவும்அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *