Search
Thursday 13 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வேகப்பந்தை எதிர்கொள்ள இளம் வீரர்கள் துரிதமாக பழகவேண்டும் – குலசேகர

வேகப்பந்தை எதிர்கொள்ள இளம் வீரர்கள் துரிதமாக பழகவேண்டும் – குலசேகர

சிம்பாப்வேயில் முத்தரப்பு தொடரில் விளையாடிவரும் இலங்கை அணி மேற்கிந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளப்பழகவேண்டும் என தெரிவித்துள்ள வேகப்பந்துவீச்சாளர் நுவன்குலசேகர மேற்கிந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள பழகினால் மாத்திரமே கிண்ணத்தை கைப்பற்ற முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்கிந்திய அணிக்கு எதிரான போட்டியில் புதன்கிழமை இலங்கை அணி 62 ஓட்டங்களால் தோல்வியடைந்ததை தொடர்ந்தே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேற்கிந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களின் உயரம் காரணமாக அவர்கள் 140 கிலோமீற்றர் வேகத்தில் பந்துவீசுகின்றனர்,ஹோல்டர் சிறப்பாக பந்துவீசினார், அவர் அவுட்ஸ்விங் பந்துகளை சிறப்பாக வீசினார், இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் விரைவாக மேற்கிந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை விளையாடப்பழக வேண்டும்,அதுவே மிகமுக்கியமானது அடுத்த போட்டியில் நாங்கள் முன்னேற்றத்தை காண்பிக்கவேண்டும்
நான் களத்தடுப்பு குறித்துகடுமையான பயிற்சிகளை மேற்கொள்கிறேன் அது பலனளித்துள்ளது,என அவர்குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *