Search
Sunday 15 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

20 ஓவர் உலகக்கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு: ஸ்டெயினுக்கு வாய்ப்பு

20 ஓவர் உலகக்கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு: ஸ்டெயினுக்கு வாய்ப்பு
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் 8–ந்தேதி முதல் ஏப்ரல் 3–ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இந்தப்போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடாத வேகப்பந்து வீரர் ஸ்டெயின் அணியில் இடம் பெற்றுள்ளார். மார்னே மார்கலுக்கு இடமில்லை. ரபடா, அபோட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் அவர் ஒரங்கட்டப்பட்டார். டேவிட் வைஸ், ஆரோன் பான்ஜியோ ஆகியோர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள் விவரம்:–
டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), ஹசிம் அம்லா, குயின்டன் டி காக், டி வில்லியர்ஸ், டுமினி, பெகரூதீன், டேவிட் மில்லர், ரூசோ, இம்ரான் தாகீர், கிறிஸ் மோரிஸ், ஆரோன் பான்ஜியோ, அபோட், ஸ்டெயின், டேவிட் வைஸ்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *