Search
Tuesday 26 May 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

8 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா அணி ஒயிட்வாஷ்

8 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா அணி ஒயிட்வாஷ்

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்டிலும் தோற்று ‘ஒயிட்வாஷ்’ ஆனது. கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்த இந்த டெஸ்ட் போட்டி 3 தினங்களிலேயே முடிந்து விட்டது.இந்த 2 டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒரு முறைதான் 200 ரன்னுக்கு மேல் எடுத்தது. 3 தடவை 200 ரன்னுக்கு குறைவாக எடுத்தது. முதல் டெஸ்டில் 165 மற்றும் 191 ரன்னிலும், 2-வது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 124 ரன்னிலும் சுருண்டு இருந்தது. அந்த அளவுக்கு பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமாக விளையாடினார்கள்.விராட்கோலி தலைமையில் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரில் ‘ஒயிட் வாஷ்’ ஆகியுள்ளது.8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்டில் ஒயிட்வாஷ் ஆகி உள்ளது. கடைசியாக 2011-2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் 4 டெஸ்டிலும் தோற்று ‘ஒயிட்வாஷ்’ ஆகி இருந்தது.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சந்தித்த 2-வது தோல்வியாகும்.இந்திய அணி 7 வெற்றி, 2 தோல்வி, 360 புள்ளிகள் பெற்று ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.ஆஸ்திரேலியா 296 புள்ளியுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 180 புள்ளியுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 146 புள்ளியுடன் 4-வது இடத்திலும் பாகிஸ்தான் 140 புள்ளியுடன் 5-வது இடத்திலும் உள்ளன.இலங்கை (80), தென் ஆப்பிரிக்கா (24), வெஸ்ட் இண்டீஸ் (0), வங்காளதேசம் (0) ஆகிய அணிகள் 6 முதல் 9-வது இடங்களில் உள்ளன.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *