Search
Friday 13 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மொஹாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ் 89 ரன்கள் சேர்க்க, 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 417 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. ஜடேஜா, ஜெயந்த் யாதவின் அபாரமான அரை சதங்களால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் முன்னிலை பெற்றது. பிறகு ஆடிய இங்கிலாந்து அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 101 பந்துகளில் 36 ரன்களுடனும், கேரத் பட்டி ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தார்கள். இந்தியத் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 56 ரன்கள் பின்தங்கியுள்ளதால் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில் 4-ம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது.இன்றைய நாளின் இரண்டாவது ஓவரில் கேரத் பட்டியை வீழ்த்தினார் ஜடேஜா. டக் அவுட்டில் வெளியேறினார் பட்டி. இதன்பிறகு சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் ஜெயந்த் யாதவிடம் தன்னுடைய விக்கெட்டைப் பறிகொடுத்தார் பட்லர். அவர் 18 ரன்கள் எடுத்தார். காயம் காரணமாக நேற்று களமிறங்காத ஹமீது இன்று பேட்டிங் செய்ய வந்தார். மற்ற வீர்களை வந்தவேகத்தில் வெளியேறினாலும் சிறப்பாக விளையாடி இங்கிலாந்தின் தோல்வியைத் தவிர்க்க முயன்ற ஜோ ரூட் 78 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இதனால் 4-ம் நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 70 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து தோல்வியின் விளிம்பில் இருந்தது.இதன்பிறகு ஹமீதும் வோக்ஸும் சிறிதுநேரம் தாக்குப்பிடித்தார்கள். ஆனால் வோக்ஸ் மற்றும் ரஷித்தின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார் ஷமி. வோக்ஸ் 30 ரன்களில் வீழ்ந்தார். ஹமீது 147 பந்துகளில் அரை சதம் எடுத்தார். இதன்பிறகு ஆண்டர்சன் 5 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதனால் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 236 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹமீது 59 ரன்களுடன் கடைசிவரை போராடி ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியத் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமி, ஜடேஜா, ஜெயந்த் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதனால் இந்திய அணிக்கு 103 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.   எளிதான இலக்கை அடைய களமிறங்கிய தொடக்க வீரர்களில் விஜய் ஏமாற்றமளித்தார். ரன் எதுவும் எடுக்காமல் வோக்ஸ் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்தது. பார்தீவ் படேல் 16, புஜாரா 13 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இதன்பிறகு புஜாரா 25 ரன்களில் ரஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எளிதான இலக்கை 20.2 ஓவர்களில் கடந்தது இந்திய அணி. 2 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பார்தீவ் படேல் 67, கோலி 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. 4-வது டெஸ்ட், மும்பையில் டிசம்பர் 8 அன்று தொடங்குகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *