செய்திகள்

விளைவுகள்

எல்லா மனித செயற்பாடுகளும் ஒரு விளைவை ஏற்படுத்தும். “விளைவுகள்” மனித செயற்பாடுகளின், எதிர் விளைவாக கொள்ளப்படும். மனித செயற்பாடுகள் உலகாய நோக்கிலும்;, உளம் சார்ந்த நோக்கிலும், விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஆனால் செயற்பாடுடன்  நேரடியாக தொடர்புபட்டவர்களுக்குத் தான் விளைவுகள் வெளிப்படும்; என்ற அவசியம் இல்லை. அத்துடன் எல்லா செயற்பாட்டின் விளைவுகளும் ஒரு நபருடன் நேரடியாக தொடர்புபட்டதாகவும் இருப்பதில்லை. பல செயற்பாடுகளில் விளைவுகளுடன் சம்பந்தப்பட்டவர் மறைமுகமாக தொடர்புபட்டிருப்பார். இவர் விளைவுகளை அனுபவித்த நிலையில் காரண காரியங்களை அறியாதவராக இருப்பார். இதனால் தற்கால மனித செயற்பாடுகளில் “விளைவுகள்” பற்றிய புலக்காட்சி (Pநசஉநிவழைn) கூடிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. விளைவுகள் மாறுபட்டு, திரிபுபட்டு சம்பந்தப்படாதவர்களையும் தாக்கும் போக்கு காணப்படுகிறது. எனவே மனித வாழ்வில் விளைவுகள் சார்ந்த பார்வை வாழ்வை நெறிப்படுத்த அவசியமாகும்.

Vilaivukal-2செயற்பாட்டின் விளைவுகளின் தாக்கம் சார்ந்த பார்வையில்

செயற்பாட்டில் ஈடுபட்டவனுக்கு விளைவு நேரடியாக தாக்கும். (நெருப்பில் கை வைத்தால் சுடும்.)
செயற்பாடு குறித்துக்காட்டிய அடுத்தவனை, குழுவை அல்லது சமூகத்தை நேரடியாக தாக்கும். (திட்டமிட்டு பழி போடுதல், அடுத்தவன் சொத்தை அபகரித்தல்)
செயற்பாடு குறித்துக் காட்டாத அடுத்தவனை குழுவை, சமூகத்தை பொதுவாக தாக்கும். (மரம் வெட்டுதல்)
மேற்காட்டப்பட்ட விளைவுகளின் தாக்கம் சார்ந்த பார்வையில் இறுதியாக காட்டப்பட்ட மனித குலத்தை பொதுவாக தாக்கும் விiவுகள் சார்ந்த செயற்பாட்டில் பொதுவாக மனிதன் கூடிய அக்கறை கொள்வதில்லை. குறிப்பாக அபிவிருத்தியடையாத, தன்னிறைவு அடையாத நாடுகளில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுதல் என்ற வகையில், மனித மாண்பை, நல்லாட்சியை, ஜனநாயக கோட்பாட்டை மதிக்காது அதிகாரத்தை கையிலெடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் பாரிய சமூக பொருளாதார அவலங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக இன,மத வருமான அடிப்படைகளில் சிறுபான்மையினராக காணப்படுபவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் கருத்தில் எடுக்க்பபடாது அவர்கள் துன்பப்படும் நிலை தொடர்கின்றது. இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் இந்த போக்கு குறித்த சிறுபான்மையினருக்கு உள்ளும் காணப்படுவதனால் இச் செயற்பாடுகள் தன்னைத்தானே துன்பப்படுத்தும் கோடரிக் காம்பாக காணப்படும்.

இந்த நோக்கில் விளைவுகள் பற்றிய பார்வையில் புரிதல் வலியுறுத்தப்படுத்தப்படுவது அவசியமாகும். ஏனெனில் பல சந்தர்ப்பங்களில் பல பாரிய பாதகமான விளைவுகள் ஏற்பட்டு விடுகின்றன. இங்கு இத்தகைய விளைவுகக்கு காரணமானவர்கள் தொடர்ந்தும் அவ்வாறு செயற்படுவது ஆச்சரியமானதாகவே காணப்படுகின்றது. எனவே ஒரு செய்பாட்டின் விளைவுகளின் பாதிப்பு சார்ந்த பார்வை புரிதலுக்கு உட்படுத்தப்படல் வேண்டும்.

Vilaivukal-3சமூகப் பாதிப்பு சார்ந்த பார்வை

சுயநல நோக்கிலான செயற்பாடு. (வீட்டுக் குப்பைகளை வீதியில் போடுதல்)
ஆதிகாரத்தை நிலைநிறுத்தல்;. (மனம் புண்பட பேசுதல்)
சுமூக ஒப்புரவு இல்லாது வாழ்தல். (ஒதுங்கி வாழுதல், இச்சையுடன் ஒரு பெண்ணைப் பார்த்தல்.)

மேற்பார்த்த செயற்பாடுகள் பற்றி பொதுவாக சமூகத்தில் அலட்டிக் கொள்ளாத போக்கு காணப்படுகின்றது. இதனால் அயலவனைப் பற்றி அக்கறை கொள்ளாத வாழ்வு முறைக்கு பழக்கப்பட்டு பெற்றோர், முதியோர், நோய்வாய்பட்டோர், மாற்றுவலு கொண்டோர், உளநலம் குன்றியோர் எதிர்கொள்ளும் விளைவுகள் பாராமுகமாக விடப்பட்ட புரையோடிப்போன சமூகமாக மாறும் போக்கு காணப்படுகிறது. தவிர விளைவுகளின் கால வரையகைள் மாறுபட்டிருப்பதனால் தீவிரத்தை உணர்ந்து கொள்வதும் தடைப்பட்டிருக்கின்றது.

விளைவுகளின் கால வரையறை நோக்கில்

விளைவுகள் உடனடியாக நிகழ்தல். (கத்தியால் வெட்டிக் காயப்படுத்துதல்)
விளைவுகள் குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு நிகழ்தல். (மரம் வளர்த்தல்)
விளைவுகள் குறிப்பிட முடியாத நீண்ட காலத்திற்கு பின்பு நிகழ்தல். (விவசாயத்தில்  இரசாயனப் பாவனை)
விளைவுகள் நிகழுமா? நிகழாதா? என நிச்சயப்படுத்த முடியாதவை. (பெற்றோர் பிள்ளைகள் மீது காட்டும் அக்கறை)
இந் நோக்கில் உடனடி விளைவுகளுக்கு கொடுக்கும் முன் எச்சரிக்கை போன்று ஏனைய நிகழ்வுகளுக்கு முன் எச்சரிக்கை கொடுப்பதில்லை. இது அடுத்த சந்ததியினருக்கு, பாதுகாப்பான, சமாதானமான உலகத்தை ஒப்படைக்கும் எமது பொறுப்பிலிருந்து எம்மை பின்தள்ளி விடலாம்.

Vilaivukal-4இன்றைய உலக மயமாதல் நிலைப்பாட்டில் முழுமையான வர்த்தக போட்டிச் சூழலில் நுகர்வு பொருளாதார கலாசாரத்தில்; விளைவுகள் பற்றிய விபரணைகள் திரிபுபடுத்தப்படுவதற்கு அதிக வாய்ப்பு அதிகம். குறிப்பாக நுண்பாக அரசியல் நாட்டமிக்க சமூகக் கட்டமைப்பில் திரிபுபடுத்தப்பட்ட விளைவுகளை சாதுரியமாக கையாளக்கூடிய இலத்திரன், கணனி வலையமைப்புக்கள் காணப்படுகின்றது தவிர இத்தகைய திரிபுபட்ட விளைவுகளின் உண்மையைக் கண்டறியும் அக்கறை கொள்ளாமலேயே செயலில் ஈடுபடுகின்ற நாட்டம் வளர்ந்துள்ளது. இந்நிலை பாரிய தனிமனித, சமூக, வாழ்வியல், ஆன்மீக, சூழலியல் தாக்கங்கள் எம்மீது சூழ்ந்து கொண்டாலும் அத்தகைய மறைமுக பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளை மறைமுகமாக நாமே தூண்டுகின்ற போக்கு காணப்படுகின்றது. எனவே தனிமனித குழு, சமூகம் சார்ந்த செயற்பாடுகளில் விளைவுகள் பற்றிய தெளிவான, ஆழமானதுமான புலக்காட்சியை கொண்டிருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்வோம்.

விளைவுகள் பற்றி நாம் கருத்தில் கொள்ள வேண்டியவை
 • கவர்ச்சிகரமான பெண்ணிய விளம்பரங்களால் கவரப்பட்டு
 • குழந்தைக்கு தாராளமாக தாய்ப்பால் கொடுக்க முன்வராமை.
 • வாழ்வியல் அர்த்தங்களை திரிவுபட விளங்கியதால்
 • பெற்றோரின் அரவணைப்பு முழுமையாக பிள்ளைக்கு வழங்காமை.
 • பிள்ளைகளின் வளர்ச்சி முறையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படாமை.
 • சுய ஆளுமை விருத்தி அபிலாசைகளுக்கு உந்தப்பட்டு
 • சிறுவரின் இயல்பான வளர்ச்சிக்கு வசதி மறுத்தல்.
 • சிறுவர் ஆர்வம் காட்டும் தேர்ச்சிகளுக்கு ஆர்வம் வழங்காமை.
 • சமூக சேவை என்பதற்கு திரிபுபட்ட அர்த்தம் எடுத்து
 • குழந்தை, சிறுவர்களின் இயல்பூக்கங்கள்; உறவினரால் தவறாக தூண்டப்படுவது தெரிந்தும் தெரியாமலும் சமூக வாழ்வைப் பாதுகாக்க முனைதல்.
 • சிறுவர், இளைஞர்களை அவர்களுக்கு விருப்பமில்லாத வழிகளில் வற்புறுத்துதல்.
 • இளைஞர்களின் உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்காதிருத்தல்.
 • இளைஞர்களின் சமூக ஒப்புரவிற்கு வரையறை செய்தல்.
 • பெற்றோரின் சொற்பிரயோகம், நடத்தை, மனப்பாங்கு பற்றிய சுய பரிசோதனை செய்யாதிருத்தல்.
 • முதியோர் பாதுகாப்பை உதாசீனப்படுத்தல்.
 • பிறரை அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லுதல்.
 • கடமைகளில் பொறுப்பேற்றலைப் புறந்தள்ளல்.
 • சக மனிதருடைய உரிமைகளில் தலையிடுதல்.
 • சுதந்திரமான கருத்து வெளியிடுதலை தடை செய்தல்.
 • மனித கடத்தலுக்கு உடந்தையாய் இருத்தல்.
 • பலவீனமானவர்கள் மீது பலாத்காரம் பிரயோகித்தல்.
 • பொறுப்பேற்காது ஒதுங்கி வாழ்தல் என்ற நிலைப்பாட்டில்
 • தொற்றுநோய் காவிகள் பற்றிய விபரங்களை மறைத்தல்.
 • சூழல் பாதுகாப்பை புறந்தள்ளுதல்.

 

 Vilaivukal-5உண்மையில் ஒரு விவாதமேடை இச் செயற்பாடுகளுக்கான விளைவுகள் சார்ந்த பொறுப்பேற்றலை யார் மீது சுமத்துவது என்பதற்கு சரியான முடிவுக்கு வர முடியாத நிலையையே முன் வைக்கும். ஆனால் விளைவுகள் தனது ஈதிக்கத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும். இன்றைய பின் நவீனத்துவ பார்வையில் இத்தகைய “விளைவுகள்” பற்றிய  ஆராய்வே நிராகரிக்கப்படலாம். ஆனால் ஒரு பெரிய சமூகப் போராட்ட அழிவுகளின் பின் சமூக மீள் கட்டுமான நிலையில் இருக்கும் நாம் மனித செயற்பாடுகளில் விளைவுகள் பற்றிய புரிதலை மீள் பார்வைக்கு உட்படுத்துவது ஆரோக்கியமாகும். குறிப்பாக குடும்பம் என்ற நுண்பாக சமூக அமைப்பு இத்தகைய பொது பாராமுகமான போக்கினால் படிப்படியாக அச்சுறுத்தலுக்குள்ளாகிக் கொண்டிருக்கின்ற நிலையில் விளைவுகள் பற்றிய இப்புரிதல் எமது சமுதாயத்தை ஆரோக்கியமான மகிழ்வான ஒப்புரவான வாழ்விற்கு வழிவகுக்கும்.