செய்திகள்

விவாகரத்துக்கு பிறகு இங்கிலாந்து இளவரசி டயானாவை விரும்பிய டொனால்ட் டிரம்ப்: வெளிவராத தகவல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப்  எதையாவது கூறி அடிக்கடி சர்ச்சையை கிளப்பி வருபவர். இப்பொழுது மட்டுமின்றி, கடந்த காலங்களில் கூட சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு புயலை கிளப்பியுள்ளார்.

உதாரணத்திற்கு, 1990ம் ஆண்டுகளில் புகழ்பெற்ற ரேடியோ நிகழ்ச்சிகளில் டொனால்ட் டிரம்ப் பங்கு பெற்று உள்ளார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு என்னவென்றால், புகழ்பெற்ற பெண்களின் அழகை வர்ணிப்பது தான்.

கடந்த 2000ம் ஆண்டு இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்றுள்ளார். அப்போது பேசும்போது, ‘இங்கிலாந்து  இளவரசியான டயானா அழகில் சிறந்தவர். உயரமாகவும், மென்மையான தேகத்தை உடைய டயானாவை அனைவரும் ரசிப்பார்கள். எனக்கு உண்மையில் வாய்ப்பு கிடைத்திருந்தால், அவருடன் உறவுக்கொள்ளவும் தயங்கி இருக்க மாட்டேன். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்’ என பேசியுள்ளார்.
டொனால்டு டிரம்ப் மட்டுமில்லாமல், இங்கிலாந்து செய்தி நிறுவனம் ஒன்று ‘இளவரசர் சார்லஸை விவாகரத்து பெற்ற பின்னர்கூட, டயானாவை நெருங்க டொனால்டு டிரம்ப் முயற்சி செய்ததாக தகவல் வெளியிட்டு பரபரப்பை கூட்டியது.

இளவரசி டயானா மட்டுமின்றி பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி உள்ளிட்ட நடிகைகள் மீதும் தனக்கு ஒரு ஈர்ப்பு இருப்பதாக வெளிப்படையாக பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது அது பெரிதாக எடுத்து கொள்ளப்படவில்லை. தற்போது, அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடும்போது பழைய சங்கதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வருகிறது.