செய்திகள்

விஷம் கலந்த நீரைப் பருகிய 65 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

ஹப்புத்தளை – பிட்டரத்மலை தோட்டத்தில் விஷம் கலந்த நீரைப் பருகிய 65 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலைச் செடிக்கு உயரத்தில் இருந்து தெளிக்கப்பட்ட கிருமிநாசினி ஊற்று நீரில் கலந்துள்ளது.  இவ்வாறு குறித்த ஊற்று நீரை சூடாக்கி தேனீர் பருகிய தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் 10.06.2015 அன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளிகளுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுவலி போன்றவை ஏற்பட்டுள்ளதாக தோட்ட அதிகாரி தெரிவிக்கின்றார். பாதிக்கப்பட்ட 35 பேர் தியத்தலாவை வைத்தியசாலையிலும் 30 பேர் ஹப்புத்தளை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 62 பேர் பெண் தொழிலாளர்களும் 3 பேர் ஆண் தொழிலாளர்களும் அடங்குகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.