செய்திகள்

விஷாலுடன் மீண்டும் இணையும் மீரா ஜாஸ்மின்

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்து 2005ம் ஆண்டு வெளிவந்த படம் ‘சண்ட கோழி’.

இந்தப் படத்தில் ராஜ்கிரண் அப்பாவாகவும், அவருடைய மகனாக விஷாலும் நடித்திருந்தனர். சண்ட கோழி படம் வெற்றிப் படமாகவும், விஷால் தன்னை தமிழ் சினிமாவில் ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவும் நிலை நிறுத்திக் கொள்ளும் படமாகவும் அமைந்தது.

இந்நிலையில் சண்ட கோழி வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக சண்ட கோழி 2 படத்தை இயக்கவிருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி. விஷாலே ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் யார் ஹீரோயினாக நடிக்கிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை. படத்தில் நாயகியாக நடிப்பது குறித்து எமி ஜாக்சன் உள்ளிட்ட மூன்று முன்னணி நாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அதேசமயம் ‘சண்ட கோழி’ முதல் பாகத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த மீரா ஜாஸ்மின் 2-ம் பாகத்திலும் முக்கிய கதாபாத்திரல் நடிக்கிறார். திருமணத்திற்குப் பிறகு மலையாள சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் மீரா ஜாஸ்மின், சண்டைக்கோழி-2 படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறார்.