செய்திகள்

வீட்டின் சுவர்களை உடைக்க சென்ற தந்தையும் மகனும் கடும் காயம்!

அட்டன் பொன்நகர் வீதியில் பழமைவாய்ந்த ஒரு வீட்டின் சுவர்களை உடைக்க சென்ற தந்தையும் மகனும் மீதும் சுவர் இடிந்து விழுந்து அவர்கள் படுங்காயம்பட்டு டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சுவர் இடிந்து விழும் அபாயத்தில் இருந்த போதே அவர்கள் இவ்வாறு உடைக்க சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின் குறித்த இரண்டு பேரையும் பிரதேச வாசிகள் மீட்டு டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC09664